`நாங்கள் உயிரோடு இருக்கிறோம்!.. மணப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!

Lebanese bride happy to be alive after blast

by Sasitharan, Aug 6, 2020, 15:36 PM IST

பெய்ரூட் சாலைகளில் மணப்பெண் கோலத்தில் நிற்கிறார் இஸ்ரா செப்லானி. சிரித்த முகத்தோடு இன்னும் சில தினங்களில் தனக்குத் திருமணம் நடக்கப் போவதை நினைத்து அசத்தலாக கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். கேமரா இஸ்ராவை தாண்டிய அடுத்த நொடியில் மிகப்பெரிய வெடிச் சத்தம் கேட்கிறது. இஸ்ரா பதற்றத்தில் நடப்பது தெரியாமல் இருக்கிறார். அங்கிருந்த அனைவரும் உயிர் தப்பினர். ஆனால் அருகில் இருந்த கட்டடங்கள் இடியத் தொடங்குகின்றன. வருங்கால கணவர் இஸ்ராவை பத்திரமாக அழைத்துச் செல்கிறார். இவை அனைத்தும், லெபனான் வெடி விபத்துக்குச் சாட்சிகள்.

கொரோனா பேரிடருக்கு மத்தியிலும், லெபனானில் நடந்த வெடி விபத்து உலக நாடுகளில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மிகப்பெரிய விபத்தில் லெபனானின் பெய்ரூட் துறைமுகமும் மொத்தமாகச் சிதைந்துள்ளது. 135 பேரின் சாவும் இந்தக் கொடூர விபத்தால் நடந்தேறியிருக்கிறது. கடந்த ஆறு வருடமாக பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட், இவ்வளவு பெரிய கோர விபத்துக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்த கோர விபத்தை கண்முன் நிறுத்தும் காட்சிகள் தான் மணப்பெண் இஸ்ராவுக்கு நிகழ்ந்தவை.

போட்டோ சூட்டின் போது நடந்தவை குறித்து இஸ்ரா பேசுகையில், ``நான் இரண்டு வாரங்களாக எனது வாழ்க்கையின் முக்கியமான நாளுக்காகத் தயாராகி வருகிறேன்., மற்ற எல்லா பெண்களையும் போலவே நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், நான் திருமணம் செய்து கொள்ளப்போவதை அடுத்து என் பெற்றோர் நான் ஒரு இளவரசி போல் இருக்க வேண்டும் என எண்ணி, இந்த போட்டோ ஷூட்டை ஏற்பாடு செய்தனர். ஆனால் அங்கு நடந்தவையை விளக்க வார்த்தை இல்லை. பெரிய சத்தம் கேட்டது. என்ன நடந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நான் இறக்கப்போகிறேனா? எப்படி இறக்கப்போகிறேன்? என்பது குறித்து அந்த பரபரப்பான நொடிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தது.

நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறோம். இந்த வெடி விபத்தின் போது வெளிவந்த ஒலியைப் போன்ற எதையும் நான் இதுவரை கேட்டதில்லை. மற்றவர்களுக்கு என்ன நடந்தது, லெபனானுக்கு என்ன நடந்தது என்பது பற்றி நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

You'r reading `நாங்கள் உயிரோடு இருக்கிறோம்!.. மணப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை