தளபதியின் வாத்தி கம்மிங்.. பாடலால் டிரெண்டிங் ஆகும் இன்டர்நேஷனல் பிரபலம்..

by Chandru, Aug 6, 2020, 12:57 PM IST

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல பட குழு, தயாரிப்பாளர், இயக்குனர் எஅனைவரும் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற பேச்சு இருந்து வந்தாலும் அதை அவ்வப்போது அரசு மறுத்து வருகிறது.தியேட்டர் திறப்புக்கு காத்திருக்க முடியாத படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. ஆனால் அப்படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. மாஸ்டர், சூரரைப்போற்று, ஜெகமே தந்திரம் போன்ற பெரிய படங்கள் தியேட்டர் திறப்புக்காக காத்திருக்கின்றன. இதற்கிடையில் அப்படங்களுக்கு இணைய தளத்தில் கடுமையான புரமோஷன்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் ரசிகர்களே செய்து வருகிறார்கள்.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் எல்லா பாடல்களும் வெளியாகி சூப்பர் ஹிட்டாகிவிட்டது. தற்போது உலக அளவில் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. அப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலை சர்வதேச பிரபலம் ஆடம் மோர்லே (Adam Morley) பாராட்டி உள்ளார். வாத்தி கம்மிங், கிரேட் ஒர்க் என அவர் பாராட்டி இருக்கிறார்.
ஆடம் மோர்லே உலக அளவிலான சாதனை செய்பவர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கும் IARA அமைப்பின் தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடமின் இந்த பாராட்டை விஜய் ரசிகர்கள் நெட்டில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை