நடிகையை துரத்தி துரத்தி கடித்த நாய்கள்.. கார் விபத்தில் கால் உடைந்து கதறல்...

Advertisement

கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்து மேல போனாலும் ஓடி வந்து நாய் கடிக்கும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அப்படித் தான் நடிகை ஒருவருக்கு சோகம் நடந்த வண்ணமிருக்கிறது. இந்தி டிவி சீரியல்களில் நடித்து வருபவர் ஆன்ச்சல் குரானா. இவர் சில மாதங்களுக்கு முன் முஜ்சே சாதி கரோகே என்ற டிவி ஷோவில் கலந்து கொண்டார். அது பெரிய வரவேற்பை பெற்றது. யார் கண்பட்டதோ தெரியவில்லை அதன்பிறகு ஆன்ச்சலுக்கு அடுத்தடுத்து விபத்து ஏற்பட்ட வண்ணமிருக்கிறதாம். இதை ரொம்பவே கவலையுடன் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை.

இது பற்றி அவர் கூறியதாவது:டி வி ஷோவில் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் டெல்லி வந்தேன். சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது நான்கைந்து நாய்கள் என்னை துரத்தி வந்து கடித்தன. நான் கதறியபடி ஓடினேன் அப்போதும் விடவில்லை. நடுங்கிப்போன நான் சிகிச்சைக்காக தனியார் டாக்டரிடம் சென்றேன். ஆனால் அவரிடம் நாய் கடிக்கு மருந்தில்லை என்று கூறிவிட்டார். பிறகு அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றேன். தற்போது குணமாகி வருகிறேன். இந்நிலையில் எனது குடியிருப்புக்கு சென்றேன். காரை நிறுத்திவிட்டு படி ஏறுவதற்கு வந்தேன் அப்போது பார்த்து ஒருவர் காரை பின்பக்கமாக வேகமகாக எடுத்து அதே வேகத்தில் என் மீது மோதினார். நான் சத்தம்போட்டது அவர் காதில் வாங்கவில்லை காரால் இடித்து தள்ளப்பட்ட நான் கீழே விழுந்தேன். இதில் எனது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காயத்துக்கு கட்டுப்போட்டனர்.

சென்ட்டிமென்ட்டாகவே கடந்த 2 மாதம் நான் நினைத்துப் பார்க்காத வகையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இப்போது காயத்துடன் வீட்டில் படுக்கையில் படுத்திருக்கிறேன். இந்த சோகத்தில் எனது பிறந்தநாள் வந்தது. என்னை சோகத்திலிருந்து மீட்க எனது நண்பர்கள் தோழிகளை என் குடும்பத்தினர் அழைத்து பிறந்த நாளை கொண்டாடியது என் வாழ்வில் மறக்க முடியாது. எனது காலை அசைக்க முடியாததால் காலில் கட்டுடன் படுத்துக்கொண்டே இருந்தேன். ஆனாலும் இதிலிருந்து மீண்டு விடுவேன் யாரும் கவலைப்பட வேண்டாம்.

இவ்வாறு ஆன்ச்சல் குரானா கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>