பிரபல காமெடி நடிகருக்கு கொரோனா தொற்று..

Advertisement

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அபிஷேக் தவிர மற்றவர்கள் குணம் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். கொரோனா தொற்றால் கோலிவுட்டிலும் நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதுபற்றி வெளியில் சொல்லத் தயங்கி சைலன்ட்டாக சிகிச்சை எடுத்து வந்தனர்.

அமிதாப்பச்சன் தனக்குத் தொற்று ஏற்பட்டது பற்றி பகிரங்கமாகத் தெரிவித்த பிறகு மற்றவர்களும் தயக்கம் நீங்கி தங்களுக்குத் தொற்று ஏற்பட்டது பற்றி வெளியில் சொல்லத் தொடங்கினர். நடிகர் விஷால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்து குணம் அடைந்தார். அதுபற்றி அவர் வீடியோவில் தோன்றி பேசினார். அதேபோல் ஐஸ்வர்யா அர்ஜூன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். தற்போது பிரபல காமெடி நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

காமெடி நடிகர் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இவர் திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் பின்னணி பாடகர் எஸ்,பி.பாலசுப்ரமணியம் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். ஏற்கனவே பாகுபலி இயக்குனர் ராஜமவுலி, இயக்குனர் தேஜா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருணாஸ் கடைசியாக திரௌபதி படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார் .மேலும், பரேஷ் ராவல் ,ஜாக்கி ஷெராப், மோகன்பாபு போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>