24 மணி நேரத்தில் 2,046 பேர் பலி.. அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா!

by Sasitharan, Nov 26, 2020, 17:35 PM IST

உலக வல்லரசு நாடான அமெரிக்காவைப் இன்னும் பதம் பார்த்து வருகிறது கொரனா வைரஸ். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 கோடியே 07 லட்சத்து 45 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 27 ஆயிரத்து 215 ஆக உள்ள நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரத்து 411 ஆக உள்ளது. மேலும் தொற்று பாதிப்புடன் 1 கோடியே 72 லட்சத்து 68 ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,39,882 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,046 பேர் பலியாகியுள்ளனா். இதுவரை மொத்த உயிரிழப்பு 2,68,262 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது அமெரிக்காவில் கொரனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு 50,63,561 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்றும் மேலும் அவா்களில் 24,150 பேரின் உடல்நிலை மோசமான நிவையில் உள்ளனா் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்