பறிக்கப்பட்ட `திருமதி இலங்கை பட்டம் - விட்டுக்கொடுத்து உருகிய அழகி!

by Sasitharan, Apr 13, 2021, 19:04 PM IST

திருமணம் முடிந்த பெண்களுக்கான திருமதி இலங்கை அழகி போட்டி அண்மையில் நடைபெற்றது. 2021ம் ஆண்டுக்கான இந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா என்பவர் முதல் இடம் பிடித்தார். அவரருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மகிழ்ச்சியாக கிரீடத்தை சூடிய புஷ்பிகாவுக்கு அந்த சந்தோஷம் சில நிமிடம்கூட நீடிக்கவில்லை. உடனே அவரிடமிருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டது.

காரணம், புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இப்பட்டத்தை பெற தகுதியில்லை என்று கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலினா ஜூரி பட்டத்தை பறித்தார். இதனையடுத்து திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது.

கலிபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் நடத்திய போட்டியில் கரோலினா ஜூரி திருமதி உலக அழகி பட்டத்தையும் வென்றவர். இதில் மற்றொரு வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், கிரீடத்தை வேகமாக எடுத்ததால், புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தி புஷ்பிகாவுக்கே அந்த பட்டம் திரும்ப வழங்கப்பட்டது. மேலும் புஷ்பிகா மீது வீண் பழி சுமத்திய கரொலினுக்கு இது பாதகமாக அமைந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் வென்ற கரோலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்த கரோலினா ஜூரி, உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``எப்போதும் நான் எனக்கு எது சரி என்று தோணுவதை மட்டுமே செய்வேன். ஆரம்பத்தில் இருந்தே நான் முன்வைத்திருக்கும் இது ஒரு நியாயமான கூற்றாகும். விதிகளும் விதிமுறைகளும் அனைவருக்கும் சமம் என்பதை நம்புவாள் நான். எந்தவொரு நிலையிலும் நாம் வெல்லக்கூடிய வகையில் ஓட்டைகளைக் கண்டுபிடித்தது இல்லை.

திருமதி உலகப் போட்டி திருமணமான பெண்களின் கனவுகளை கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் திருமதி இலங்கை அழகி போட்டியில் நான் கண்ட அநீதியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தற்போது எனக்கு இருக்கும் ஒரே நோக்கம், கடுமையான அரசியல்மயமாக்கலால் களங்கப்படுத்தப்பட்ட இந்த போட்டி முழுவதும் போட்டியாளர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு துணை நிற்பதுதான். எனினும் இன்னொரு தகுதியானவருக்கு வாய்ப்பை வழங்க கிடைத்ததை இழப்பதில் தவறில்லை என தோன்றுகிறது. அதனால் கிரீடத்தை திருப்பி தருகிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

You'r reading பறிக்கப்பட்ட `திருமதி இலங்கை பட்டம் - விட்டுக்கொடுத்து உருகிய அழகி! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை