ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு ஆசிய பசிபிக் பகுதியிலிருந்து இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இவற்றுள் மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு தேர்வாக முடியும்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை அவையில் ஐந்து இடங்கள் உண்டு. இந்தியாவுடன் பஹ்ரைன், பங்களாதேஷ், ஃபிஜி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் முயற்சி செய்தன.
இந்தியா 188 வாக்குகள் பெற்று ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து மனித உரிமை அவைக்கு தேர்வாகியுள்ளது. வரும் 2019 ஜனவரி முதல் மூன்றாண்டுகளுக்கு இந்த அவையில் உறுப்பினராக இருக்கும்.