அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், சிட்னி நகரத்தில் மகாத்மா காந்தியில் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பங்கு கொண்ட விழாவில் வியாழன் (நவம்பர் 22) அன்று காந்திஜியின் சிலை திறக்கப்பட்டது.
மகாத்மா காந்தி உலகுக்கு உரைத்த அஹிம்சை, சமாதானமாய் இணைந்து வாழ்தல் ஆகிய செய்திகள் இக்காலத்திற்கு மிகவும் பொருந்தும். பன்முக பண்பாட்டை ஊக்குவிக்கும் ஆஸ்திரேலியாவில் பன்முக பண்பாட்டை பேணி காக்க முயற்சித்த காந்திஜியின் சிலை அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும் என்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.