போர்க்குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை இராணுவ அதிகாரிக்கு முக்கிய பதவி

Advertisement

இலங்கை இராணுவத்தின், இரண்டாவது நிலைத் தளபதி பதவியான இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசன் படையணியை வழிநடத்திய முக்கிய அதிகாரியாவார்.

இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு இவர் பொறுப்பாக இருந்தார் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

போரின் இறுதியில், சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களான நடேசன், புலித்தேவன், உள்ளிட்டவர்கள், மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வாவின் தலைமையிலான 58 ஆவது டிவிசன் படையினராலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
இவரது படைப்பிரிவிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், அவர்களின் குடும்பத்தினர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான, இவர் இறுதிக்கட்டப் போரில் ஆற்றிய பங்கை கௌரவிக்கும் வகையில், ஐ.நாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

எனினும், 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இவர் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவப் பொறுப்புக்களில் நியமிக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது, அவருக்கு இராணுவத்தின் இரண்டாவது நிலைப்பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு, மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
/body>