Jul 17, 2019, 11:52 AM IST
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் , சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தத் தீர்ப்பு, முதல்வர் குமாரசாமி தரப்புக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். Read More
Jul 16, 2019, 21:12 PM IST
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் சரியாக இருக்கும் போது, சபாநாயகர் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார். பரபரப்பான இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jul 16, 2019, 12:52 PM IST
கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் என்பவர் தனி விமானத்தில் தப்பிக்க முயற்சிக்க, அவரை மோசடி வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 15, 2019, 20:33 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ந் தேதி முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை கோரும்.தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.மும்பையில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஹோட்டலிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. Read More
Jul 15, 2019, 15:06 PM IST
கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்த நிலையில், இன்றே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்திய பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த பின் நாளை முடிவெடுப்பதாகக் கூறி சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர். Read More
Jul 14, 2019, 12:37 PM IST
கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்தது பாஜக வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. குமாரசாமியின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்காத பாஜக தரப்பு குழம்பிப் போயுள்ளதாகவும், குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைக்கும் எடியூரப்பாவின் பகீரத முயற்சிகளுக்கு, பாஜக எம்எல்ஏக்கள் பலரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Jul 12, 2019, 22:53 PM IST
பாஜகவில் கறுப்பு ஆடுகள் உள்ளன. அதனால், குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறும். எங்களுக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார் Read More
Jul 12, 2019, 20:58 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் வரும் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்களை பத்திரப்படுத்த, இரு கட்சிகள் அவர்களை ரிசார்ட்டுகளில் தங்க வைத்துள்ளனர். Read More
Jul 12, 2019, 14:28 PM IST
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். Read More
Jul 12, 2019, 10:45 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றது. Read More