Aug 19, 2020, 14:11 PM IST
திருவனந்தபுரத்தில் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியது: கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் தனியார்த் துறைகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கேரளாவுக்குச் சுற்றுலாத் துறை மூலம் அதிக அளவில் வருமானம் கிடைத்து வருகிறது. Read More
Aug 19, 2020, 13:50 PM IST
கொரோனா ஊரடங்கு சட்டத்திற்கு முன்பாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து குவைத்துக்கு ஏராளமானோர் சுற்றுலா விசாவில் சென்றனர். அங்குச் சென்ற பின்னர் திடீரென ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதால் யாராலும் தங்களது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. Read More
Aug 19, 2020, 13:33 PM IST
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல கோடி பேர் வேலையும், வருமானமும் இழந்து தவித்து வருகின்றனர். வளைகுடா நாடுகள், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற லட்சக்கணக்கானோர் வேலை இழந்து சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். Read More
Aug 19, 2020, 12:58 PM IST
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் மாதம் முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக் டவுன் தற்போது 7ம் கட்டத்தில் இருக்கிறது. முதல் கட்ட லாக் டவுன் அறிவித்த போதே முன்னெச்சரிக்கையாகத் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. Read More
Aug 19, 2020, 12:42 PM IST
பொது இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்தாலோ, ஊர்வலம் நடத்தினாலோ, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகச் சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. தமிழகத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More
Aug 19, 2020, 12:31 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதித்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைந்து திரும்பப் பலரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நாளை ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் கூட்டு பிரார்த்தனை செய்ய நடிகர்கள், ரசிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். Read More
Aug 19, 2020, 12:02 PM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் அந்த மாநிலத்தில் நோயின் தீவிரம் குறைவாகவே இருந்தது. ஜனவரி மாத இறுதியில் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் முதலில் 3 பேருக்கு மேல் நோய் பரவில்லை. Read More
Aug 19, 2020, 11:27 AM IST
நாள் முழுவதும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை செய்வதால் கொரோனா தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றாலும், இது வேறு பல உடல்நல கோளாறுகளைக் கொண்டுவரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. Read More
Aug 19, 2020, 11:12 AM IST
கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே சபரிமலை ஐயப்பன் கோவிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலைக்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 19, 2020, 10:08 AM IST
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 9ம் தேதி மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிந்தது. Read More