Aug 14, 2019, 14:01 PM IST
இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தி வீர சாகசம் நிகழ்த்திய இந்தியப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்படுகிறது. Read More
Aug 13, 2019, 12:40 PM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, பவுன் ரூ.28,896 என்ற விலைக்கு விற்கிறது. Read More
Aug 13, 2019, 11:58 AM IST
நெல்லை அருகே ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த பண்ணை வீட்டிற்குள் இரவு நேரத்தில் அரிவாள்களுடன் புகுந்த கொள்ளையர்களை வயதான தம்பதியினர், செருப்பு.. சேர்.. கட்டை.. என கையில் கிடைத்த பொருட்களை கொண்டே தைரியமாக அடித்து விரட்டிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீர, தீரத்துடன் போராடிய அந்தத் தம்பதிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. Read More
Aug 9, 2019, 21:10 PM IST
காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா முன்னாள் கொறடா புவனேஸ்வர் காலிட்டா, பாஜகவில் இணைந்தார். Read More
Aug 8, 2019, 19:42 PM IST
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கி கவுரவித்தார். Read More
Aug 8, 2019, 13:04 PM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது Read More
Aug 8, 2019, 12:07 PM IST
ஒரு முதலமைச்சரின் மனைவியிடமே வங்கி மேலாளர் போல் போனில் பேசி, ரூ.23 லட்சத்தை ஆன்லைனில் சுருட்டிய ஜார்கண்ட் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா எம்.பி.யுமான பிரநீத் கவுரிடம் கடந்்த மாதம் 29ம் தேதி ஒருவர் போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்தார். போனில் தொடர்பு ெகாண்ட மர்ம நபர், தன்னை ஸ்டேட் பேங்க் மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். Read More
Aug 7, 2019, 21:02 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 7, 2019, 14:41 PM IST
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை கடந்த 2016ம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. Read More
Aug 7, 2019, 12:00 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. Read More