Jul 6, 2020, 18:55 PM IST
ரஜினிகாந்த் தனது 168வது படமாகச் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் 169வது படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jul 6, 2020, 15:52 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பெரிய நடிகராக வருவார் என்று பலராலும் கணிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14 ம் தேதி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்தார். இது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. Read More
Jul 6, 2020, 14:28 PM IST
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்றச் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 6, 2020, 14:18 PM IST
டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, லக்னோவில் குடியேற முடிவு செய்திருக்கிறார். அவர் வசித்த டெல்லி பங்களா தற்போது பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
Jul 6, 2020, 13:13 PM IST
கல்வான் பகுதியில் 2 கி.மீ. தூரத்திற்குச் சீனப் படைகள் பின்னோக்கி நகர்ந்துள்ளது. காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே ஒரு மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. இதையடுத்து, கடந்த ஜூன் 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அ Read More
Jul 6, 2020, 13:02 PM IST
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 6, 2020, 10:52 AM IST
ஒரு வருடத்துக்கு முன் நடிகை சமந்தாவின் மனது புயலில் சிக்கியது போல் தவித்தது. அவர் மிகவும் விருப்பப்பட்டு நடித்த ஓ! பேபி என்ற படம் வெளியானது. அப்படத்தை விமர்சகர்கள் கிழி கிழியென்று கிழித்தார்கள். இதுதான் சமந்தாவின் தவிப்புக்குக் காரணம். அதையெல்லாம் மீறி அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. Read More
Jul 6, 2020, 10:12 AM IST
தமிழில் துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் பெயரில் போலியாக இணைய தளத்தில் புதிய படத்துக்கு நடிகர், நடிகை தேவைப்படுகிறார்கள் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனச் செல் நம்பர் முதற்கொண்டு பகிரங்கமாகச் சிலர் நெட்டில் விளம்பரம் செய்கிறார்கள். Read More
Jul 5, 2020, 13:27 PM IST
சர்ச்சை இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. அவர் இயக்கி உள்ள மர்டர் படம் ஒடிடி யில் வெளியாக உள்ளது. பிரனாய் பெருமல்லா என்பவரின் கொலையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பிரனாய் தந்தை இப்படத்தைத் தடை செய்யக் கேட்டு நலகொண்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் Read More
Jul 5, 2020, 12:53 PM IST
அழகான கவித்துவமான காதல் படம் மிருணா. இதன் சிறப்பு பிரிமியர் காட்சி ரிகல் டாக்கிசில் வரும் 8ம்தேதி இரவு 8 மணிக்கு வெளியாகிறது. மிருணா படத்தை எழுதித் தயாரித்து இயக்குகிறார் ராகவ் மிர்தாத். இவர் தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர் Read More