ரஜினிகாந்த் தனது 168வது படமாகச் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் 169வது படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி வந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இந்தியன் 2ம் பாகம் படத்தில் நடிக்கத் தொடங்கினார். ரஜினியும் தீவிரமாக அரசியலில் இறங்க விருப்பதாக கூறப்பட்டது. இதனால் கமல் தயாரிப்பில் உருவாகவிருந்த ரஜினிகாந்த் நடிக்கும் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு அப்பேச்சு அப்படியே அடங்கிப்போனது.கமல்ஹாசன், தேவர் மகன் இரண்டாம் பாகமாகத் தலைவன் இருக்கிறான் படத்தைத் தயாரித்து இயக்கி நடிக்கத் தயாரானார். இதில் விஜய் சேதுபதி வில்லன் வேடம் ஏற்கிறார். கொரோனா ஊரடங்கில் திரையுலகமே முடங்கி இருக்கும் நிலையில் தற்போது கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கைவிடப்பட வில்லை என்ற தகவல் வெளியாகி கோலிவுட்டையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. லாக்டவுன் முடிந்த பின் வரும் நவம்பர் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.