Jul 3, 2019, 10:18 AM IST
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முக்கியப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிதிக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுமே முட்டி மோதும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கலாம். Read More
Jul 3, 2019, 08:52 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 7-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது இந்தியா. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் சாதனை சதம் கைகொடுக்க, பந்து வீச்சிலும் பும்ரா, பாண்ட் யா விக்கெட்டுகளை சிதறடிக்க, திகிலை ஏற்படுத்திய வங்கதேசத்தை துரத்தியடித்தது இந்தியப் படை. Read More
Jul 2, 2019, 19:46 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்களின் சொதப்பல் ஆட்டம் தொடர்கிறது . வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்தும், லோகேஷ் ராகுலும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும், அடுத்து வந்த வீரர்கள் சொதப்பியதால் 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 314 ரன்கள் எடுத்தது. Read More
Jul 2, 2019, 15:24 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். Read More
Jul 2, 2019, 10:26 AM IST
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேசத்துடன் இந்தியா மோதுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் இந்தியா காலடி வைத்து விடும். அதே வேளையில் இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் வங்கதேசம் நீடிக்க முடியும். இத்தகைய சூழலில் இன்றைய போட்டியில், இந்தியாவுக்கு வங்கதேசம் கடும் சவால் விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காயம் பிரச்னையால் அடுத்தடுத்து வீரர்கள் விலகுவது தான் இந்திய அணிக்கு சிக்கலாகியுள்ளது. Read More
Jul 2, 2019, 09:32 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் 4 - வது அணி எது என்பதில் சஸ்பென்ஸ் நீண்டு கொண்டே போகிறது. நேற்று மே.இந்திய தீவுகளை வென்ற இலங்கை அணி, தமக்கும் அரையிறுதி வாய்ப்பு கிட்டாதா? என்ற ஏக்கத்தில் உள்ளது. Read More
Jul 1, 2019, 15:03 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கரும் விலகியுள்ளார். Read More
Jul 1, 2019, 10:12 AM IST
உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா வெல்ல வேண்டும் என பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனை செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. இந்தத் தொடரில் முதல்முறையாக காவி நிற சீருடையுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் முறையாக தோல்வியையும் தழுவி இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. Read More
Jun 30, 2019, 18:06 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? என்ற சவாலான போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணியில் விஜய் சங்கருக்கு ஓய்வு தரப்பட்டு | அதிரடி இளம் வீரர் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதால் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. Read More
Jun 30, 2019, 10:24 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் காவி நிற சீருடையுடன் இந்தியா களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் வென்றால் இந்தியா ஜம்மென அரையிறுதியில் நுழைய முடியம் என்பதால் காவி ராசியும் கை கொடுக்குமா? என்பது தெரிந்துவிடும். Read More