வங்கதேசத்துடனான திக்.. திக்... போட்டி.! கெத்தாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 7-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது இந்தியா. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் சாதனை சதம் கைகொடுக்க, பந்து வீச்சிலும் பும்ரா, பாண்ட் யா விக்கெட்டுகளை சிதறடிக்க, திகிலை ஏற்படுத்திய வங்கதேசத்தை துரத்தியடித்தது இந்தியப் படை.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா முதல் அணியாக நுழைந்து விட்டது. அடுத்து தகுதி பெறுவதற்கு அணிகளிடையே பெரும் போராட்டமே நடக்கிறது என்று சொல்லலாம்.

நேற்று பர்மிங்ஹாமில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பங்கேற்ற போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை எனலாம். வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் ஜம்மென்று காலடி எடுத்து வைக்கலாம் என்ற நிலை இந்தியாவுக்கும், இந்தியாவை வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கலாம் என்ற இக்கட்டில் வங்கதேசமும் இந்தப் போட்டியை எதிர்கொண்டன.

டாஸ் வென்ற இந்திய காப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித், ராகுல் ஜோடி இந்தப் போட்டியில் அசத்தியது. முதல் விக்கெட்டுக்கு 29. 2 ஓவர்களில் 180 ரன்களை குவித்து சாதனை படைத்தனர். இந்தத் தொடரில் 4-வது சதமடித்த ரோகித்(104) அவுட்டாக, ராகுலும் (77) அரைசதம் கடந்து அவுட்டானார். இந்த துவக்க ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்ததை, அடுத்து வந்த இந்திய வீரர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர் என்றே கூறலாம். தொடர்ந்து 5 போட்டிகளில் அரைசதம் அடித்து சாதித்திருந்த கோஹ்லி (26), முந்தைய போட்டிகளில் அதிரடி காட்டிய பாண்ட்யா (0) அடுத்தடுத்து வீழ, இந்திய அணியின் வேகம் மட்டுப்பட்டது எனலாம். ரிஷப் பாண்ட் மட்டும் ஓரளவு அதிரடி (48) காட்ட, கடைசிக் கட்டத்தில் தோனி (35) வழக்கம் போல அதிரடி காட்டத் தவறினார். முதன் முறையாக உலகக் கோப்பை போட்டியில் ஆடும் தினேஷ் கார்த்திக்கும் (8) நல்ல வாய்ப்பை வீணடித்தார். இப்படி கடைசி ஓவர்களில் இந்திய வீரர்கள் சொதப்ப 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் மட்டுமே சேர்த்தது இந்தியா. ஒரு கட்டத்தில் 350 ரன்களுக்கு மேல் இந்தியா ரன்களை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அபாரமாக பந்துவீசிய வ.தேச வீரர் முஸ்தபிகுர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில், 315 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட வங்கதேச வீரர்களும் கடுமையாக போராடினர் என்றே கூறலாம். பதற்றமின்றி பவுண்டரிகளை விளாசினர்.

ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் திறமை காட்டி, சீரான இடைவெளியில் வங்கதேச வீரர்களை வெளியேற்றினர்.தமிம் (22), சவுமியா(33), ஷாகிப்(66), முஸ்பிகுர் (24), மொஸ்தைக் (3),ச பிர் (36) என அடுத்தடுத்து வீழ்ந்தாலும், சபியுதீன் (51) கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டி இந்தியாவுக்கு டென்ஷனை எகிறச் செய்தார்.

ஆனால் சபியுதினுக்கு மற்ற வீரர்களின் பார்ட்னர்ஷிப் கிடைக்காததால் 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது வ.தேசம். இந்தப் போட்டியில் இந்தியத் தரப்பில் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். தொடரில் 4-வது சதமடித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகனானார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு நுழைந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அரையிறுதிக்குள் நுழையும் அடுத்த இரு அணிகள் எவை என்பதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடையே சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

வ.தேசத்துடனான போட்டி; இந்தியா பேட்டிங்..! கேதார், குல்தீப் நீக்கம் - தினேஷ், புவனேஷ்வர் உள்ளே!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stewsmith-breaks-world-record
இன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
india-pakistan-play-davis-cup-tennis-this-year-end
டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா!
fifa-u17-female-worldcup-held-next-year-in-india
இந்த வருஷம் இல்ல அடுத்த வருஷம் தான் ரியல் பிகில் ஆரம்பம்!
david-warner-poor-play-in-ashes-test
இந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா?
shubmangill-play-in-test-instead-of-klrahul
ராகுல் நீங்க ரெஸ்ட் எடுங்க.. சுப்மன் கில் நீங்க களத்துல இறங்குங்க!
rabada-degrading-viratkohli
கோலி இந்த ஏரியாவில் கில்லி இல்லையா? – ரபாடாவுக்கு குவியும் கண்டனங்கள்
australia-beat-england-in-4th-test-and-won-ashes-championship
இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் கோப்பையை கைப்பற்றிய ஆஸி!
american-open-tennis-nadal-champion
4வது முறையாக சாம்பியன்ஷிப் – அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் சாதனை!
ilavenil-valarivan-met-kiran-rijiju-and-get-wish-from-him
கிரண் ரிஜ்ஜுவை சந்தித்து வாழ்த்து பெற்ற தங்கமங்கை இளவேனில்!
pv-sindhu-met-darmendra-pradhan-today
தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தங்கமங்கை பி.வி. சிந்து!
Tag Clouds