Jul 19, 2019, 16:36 PM IST
வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோரின் வேட்புமனுக்கள், எதிர்ப்பு காரணமாக நீண்ட இழுபறிக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது. Read More
Jul 18, 2019, 12:39 PM IST
மதுரையில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடும் வேளையில், குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாய் உடைந்து, மழை வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளும் அடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, குடிநீர் வீணாவதைக் கண்டு, மதுரை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். Read More
Jul 13, 2019, 12:00 PM IST
சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் தண்ணீ்ர் பத்து சதவீத தேவையைக் கூட பூர்த்தி செய்யவில்லை. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீர் விலை இப்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. Read More
Jul 4, 2019, 13:46 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Jul 4, 2019, 11:15 AM IST
சட்டசபையில் ஜூலை 3ம் தேதி கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, ‘‘பத்து பொருத்தங்களில் 8 பொருத்தம் சரியாக இருக்கும் ஒருவருக்கு ஒரு பெண்ணை திருமணம் ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அவருக்கு சொல்புத்தி, செயல்புத்தி இல்லாததால் அந்தத் திருமணம் நடைபெறாமல் போனது. ஆனால், அ.தி.மு.க.வுக்குத்தான் எல்லா பொருத்தங்களும் சரியாக இருக்கிறது. அதனால், அ.தி.மு.க.தான் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்” என்று கூறினார் Read More
Jul 3, 2019, 13:31 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒரு பக்கம் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் தமிழக அரசோ அதை மறுக்க, இந்த விவகாரத்தில் இரு அரசுகளும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுவது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, விரக்தியடையச் செய்துள்ளது Read More
Jun 25, 2019, 09:35 AM IST
குஜராத்தில் இருந்து 2 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான பின், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றமோ, வேறு யாருமோ தலையிடக் கூடாது என்று கறாராக பதிலளித்துள்ளது Read More
Jun 23, 2019, 16:24 PM IST
சென்னையில் நிலவும் வரலாறு காணாத குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காண தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். Read More
Jun 22, 2019, 14:11 PM IST
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்திற்குள்ளேயே எதிர்ப்பு காட்டினால் அண்டை மாநிலத்துக்காரன் நமக்கு எப்படி தண்ணீர் தருவான் என துரைமுருகனின் கருத்துக்குக்கு கண்டன குரல்கள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது Read More
Jun 20, 2019, 17:36 PM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவ சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கடந்த இரண்டரை வருடமாக இந்த முருகன் திருவுருவ சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திருவுருவச் சிலை அருகே உள்ள மலைக் குன்றில் இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயில் உள்ளது. Read More