Jun 5, 2020, 10:26 AM IST
100 படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி. இவர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தைத் தயாரித்து இருந்தார். தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குப் பலரும் வாழ்த்துக் கூறினர். Read More
Jun 3, 2020, 14:47 PM IST
திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு புதியவரைத் தேர்வு செய்வதற்காகக் கடந்த மாதம் கட்சியின் பொதுக்குழு கூடுவதாக இருந்தது. Read More
Jun 3, 2020, 11:09 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவரும், நீண்ட காலமாக திமுக தலைவராக பணியாற்றியவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. Read More
May 30, 2020, 09:50 AM IST
பிரதமர் மோடி 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தாம் 2வது முறை பதவியேற்ற நாள், இந்திய ஜனநாயக வரலாற்றில் தங்க முத்திரை பதிக்கும் பகுதி என்று அவர் பெருமிதம் கொண்டுள்ளார். Read More
May 26, 2020, 14:02 PM IST
டி.என்.பி.எஸ்.சி ஊழல் வழக்குகளைப் புலனாய்வு செய்து வந்த சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.டிஜிபி ஜாபர்சேட், கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். Read More
May 22, 2020, 12:24 PM IST
திமுகவிலிருந்து விலகிய வி.பி.துரைசாமி, இன்று பாஜக தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார்.திமுக துணைப் பொதுச் செயலாளராக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி இருந்து வந்தார். Read More
May 22, 2020, 09:46 AM IST
திமுகவில் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜகவில் சேருகிறார்.திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி, துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். Read More
May 18, 2020, 16:07 PM IST
தேர்தலில் போட்டியிடாமல் பதவியேற்ற முதல்வர் அல்லது அமைச்சர்கள் பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராகவோ, சட்டமேலவை உறுப்பினராகவோ பொறுப்பேற்க வேண்டும். அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். Read More
May 12, 2020, 14:06 PM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன்சிங், தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. Read More
May 11, 2020, 14:35 PM IST
மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. Read More