32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?

by Ari, Apr 30, 2021, 10:42 AM IST

இத்தாலியில் புடெல்லி தீவில் வசித்து வந்த முதியவர் 32 ஆண்டுகளுக்கு பின் அந்த தீவில் இருந்து வெளியேறியுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த ராபின்சன் குருசோ என்பவர் 1939 ஆம் ஆண்டு, இத்தாலி கடற்பகுதியில் நண்பர்களுடன் கடற்பயணம் மேற்கொண்டார். அப்போது ராபின்சன் மற்றும் அவரின் நண்பர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு மணல் கொண்ட கடற்கரையில் உள்ள புடெல்லி என்ற தீவிற்கு சென்றுள்ளனர்.

அந்த தீவை பாதுகாக்க ஆள் தேடிகொண்டிருக்கும் சமயத்தில், கூட வந்த நண்பர்கள் அந்த தீவை விட்டு வெளியேற, ராபின்சன் மட்டும் தானாக முன் வந்து தீவினை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

கடந்த 32 ஆண்டுகளாக புடெல்லி தீவினை எந்த ஒரு பிரச்சனையுமின்றி பாதுகாத்து வந்ததோடு கடற்கரைகளை அழகாக வைத்துள்ளார்.

தீவின் சுற்றுச்சூழல் குறித்து சுற்றுலா பயணிகளிடம் பெருமையாக பேசி அதன் சிறப்பம்சங்களை விளக்கி வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு தீவை நிர்வகித்து வரும் தேசிய பூங்கா அதிகாரிகள் ராபின்சன் குருசோவை தீவில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர்.

32 ஆண்டுகளாக தான் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற மனம் இல்லாமல் மிகுந்த மனவேதனையுடன் ராபின்சன் குருசோ அந்த தீவில் இருந்து வெளியேறியுள்ளார்.

You'r reading 32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை