Sep 24, 2019, 13:28 PM IST
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Read More
Sep 19, 2019, 11:46 AM IST
சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். Read More
Sep 19, 2019, 08:20 AM IST
காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால், சென்னை மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். Read More
Sep 6, 2019, 11:16 AM IST
கர்நாடகாவில் மீண்டும் கன மழை கொட்டி வருவதால், காவிரியில் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடு கிடுவென உயர்ந்து, அணை நிரம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Aug 19, 2019, 12:23 PM IST
பருவமழை தீவிரமடைந்திருப்பதால் வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
Aug 9, 2019, 12:07 PM IST
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை கொட்டி வருகிறது. அவலாஞ்சியில் நேற்றும் வரலாறு காணாத அளவுக்கு 91.1 செ.மீ., மழை பதிவான நிலையில், கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் தலைமையில் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். Read More
Aug 8, 2019, 10:53 AM IST
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கை மழையால் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் பெய்து வரும் கன மழையால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 80 செ.மீ பெய்த வரலாறு காணாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது. Read More
Jul 27, 2019, 13:23 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கன மழை கொட்டி வருகிறது. வெள்ளத்தின் மும்பை தத்தளிக்கிறது. மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் நடுவழியில் சிக்கிக் கொண்டது. சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், ரயிலில் இருந்த 2000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரமாக உணவு, தண்ணீர் இன்றி தவிக்க, பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். Read More
Jul 26, 2019, 12:23 PM IST
சென்னையில் 55 நாட்களில் பெய்த மழை நீரை சேமித்து வைத்திருந்தால் சென்னை மக்களின் 150 நாள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திருக்கலாமாம். ஆனால், மழை நீரை முறையாக சேகரிக்காததால், 9.5 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு போயிருக்கிறது. Read More
Jul 21, 2019, 13:10 PM IST
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, கன மழை பெய்வதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்புகின்றன. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More