அரியலூர் அருகே குக்கர் பறிமுதல்: பறக்கும் படை கைப்பற்றியது

Feb 28, 2021, 09:10 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் வாகன தணிக்கை நடந்து வருகிறது. அரியலூர் அருகே வாரணவாசி சமத்துவபுரத்தில் சனிக்கிழமை அதிகாலை வருவாய் துறையினர் வாகன தணிக்கை நடத்தினர்.
இரண்டு மினி லாரிகளை மறித்து அவர்கள் சோதனையிட்டபோது அவை சென்னையிலிருந்து தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இரண்டு லாரிகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் படங்கள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 3லிட்டர் கொள்ளவு கொண்ட 3,250 குக்கர்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.12 லட்சம் என்று கூறப்படுகிறது. இரண்டு லாரிகளையும் கைப்பற்றிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைய செய்திகள்