மார்ச் 7ம் தேதி வெளியாகிறது திமுகவின் தேர்தல் அறிக்கை

Mar 1, 2021, 17:29 PM IST

மார்ச் 7ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கும் பிரமாண்டமான மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "மக்கள் ஆவலுடன் காத்திருக்கும்வண்ணம் இன்னும் 2 மாதங்களில் அரசாங்கம் மாற இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும். திருச்சிராப்பள்ளியில் மார்ச் 7ம் தேதி பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மாநிலத்தை முன்னேற்றுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள திட்டங்களை விளக்குவோம். தேர்தல் அறிக்கையும் வெளிடப்படும்," என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்