ரஃபேல் போர் விமானம் - பிரான்ஸ் முன்னாள் அதிபர் பரபரப்பு தகவல்!

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் - ஹொலாந்தே பரபரப்பு தகவல்

ரஃபேல் போர் விமானத்தை இணைந்து தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரை இந்திய அரசே கூறியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாந்தே கூறியுள்ளார்.

முன்னாள் அதிபர் வெளியிட்டுள்ள புதிய தகவலால் ரஃபேல் போர் விமானம் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆல் இந்தியா அளித்துள்ள பேட்டியில் மத்திய அமைச்சர்களின் தகவல்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது இந்திய அரசே தெரிவித்ததால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸால்ட் ஹவியன் நிறுவனம் வேறு வழி இல்லாமல் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக ஹொலாந்தே கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லியும், நிர்மலா சீதாராமனும் கூறி வந்தது முற்றிலும் தவறான தகவல் என்பதை இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

முன்னாள் அதிபர் ஹொலாந்தே பேட்டியை பிரான்ஸ் செய்தியாளர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதை மீண்டும் பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தியாளர் மணிஷ் திவாரி 2012 ல் 590 கோடி ரூபாயாக இருந்த ரபேல் விமானம் 2015ல் 690 கோடியாக உயர்ந்தது எப்படி என்பதையும், ஆல் இந்திய அம்பலபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் டஸால்ட் இணைந்து விமானங்களை தயாரிக்கும் என்று மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்போது அரசு நிறுவனத்தின் நீக்கிவிட்டு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ரஃபேல் போர் விமானம் - பிரான்ஸ் முன்னாள் அதிபர் பரபரப்பு தகவல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மணல் லாரி உரிமையாளர்கள் ஆளுநரை சந்திக்க முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்