கோடையில் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து மழை பொய்த்ததால் கடும் வறட்சி தலைதூக்க வாய்ப்பு

Mar 10, 2019, 09:34 AM IST

பருவமழை காலத்தில் இந்தியாவில் 47 சதவீத இடங்களில் மழை பொய்த்து போனதால், வரும் கோடையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வறட்சி காத்திருப்பதாக, ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 

குஜராத் தலைநகர் காந்திநகரை சேர்ந்த ஐஐடி விஞ்ஞானிகள் கடந்த பருவத்தில் பெய்த மழை பதிவுகளை, வறட்சி கணிக்கும் கருவி கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். ஐஐடி உதவி பேராசிரியர் விமல் மிஸ்ரா தலைமையில், ஆராய்ச்சி மாணவர்கள் அமர்தீப் திவாரி தலைமையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், பெய்த மழையளவு, மண்ணின் ஈரத்தன்மை உள்ளிட்டவை கணக்கிடப்பட்டது. அவ்வகையில், கடந்த பருவத்தில் நாட்டில் 47 சதவீத இடங்களில் மழை பொய்த்து போனது. குறிப்பாக, 16 சதவீத பகுதிகள், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அவை கடும் வறட்சியை சந்தித்து வருகின்றன. இதனால் வரும் கோடை காலத்தில் இந்தியா பெரும் வறட்சியை, குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அருணாசல பிரதேசத்துக்கு போதிய அளவு மழை பெய்யவில்லை. வட தமிழகம், ஜார்கண்ட், ஆந்திர பிரதேசம், குஜராத் பகுதிகளில் வறட்சி அதிகரித்து, நிலத்தடி நீர் தட்டுப்பாடு வரக்கூடும். இந்த இடங்களை முன்னுரிமை தந்து அரசு கவனிக்காவிட்டால், தீவிர பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

READ MORE ABOUT :

More Akkam pakkam News

அதிகம் படித்தவை