நீங்கள் முடிவு செய்யக்கூடாது - தணிக்கை வாரியத்தை வெளுத்து வாங்கிய நந்திதா தாஸ்

எந்த படத்தை பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதை தணிக்கை வாரியம் முடிவு செய்யக்கூடாது; மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று புகழ்பெற்ற நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

கன்னத்தில் முத்தமிட்டால், அழகி போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். இந்தியில் நிறைய படங்களிலும் நடித்திருக்கும் நந்திதா, தற்போது இயக்குநராகவும் மாறியிருக்கிறார். சாதத் ஹசன் மண்டோ என்ற எழுத்தாளரின் கதையை திரைப்படமாக்குகிறார்.

இந்நிலையில், நந்திதா தாஸ் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “கலை தலைத்தோங்க வேண்டுமானால், அதற்கு சுதந்திரம் தேவை. திரைப்படங்களை தணிக்கை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட ஒரு சிலர் கொண்ட அமைப்பாகவே தணிக்கை குழு உருவாகி இருக்கிறது.

கலாச்சாரத்தை காக்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களால் ஆபத்து நிறைந்த சூழல் உள்ளது. தணிக்கை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தணிக்கை குழுவின் மொத்த அமைப்புமே தவறானது என்று நான் கருதுகிறேன்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் அமர்ந்து நாட்டில் உள்ளவர்கள், என்ன பார்க்க வேண்டும், என்ன பார்க்கக் கூடாது என்பதை எப்படி முடிவு செய்யலாம்? அப்படிப்பட்டவர்கள் மக்களை தவறாக கணக்குப்போடுகிறார்கள். இதைத் தான் பார்க்க வேண்டும். இதை பார்க்கக்கூடாது என்று அந்த மக்களை சிறுமைப்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி