புதுடெல்லி: பிரதமர் மோடியை ட்விட்டர் வலைத்தளத்தில் 4 கோடியே 48 ஆயிரத்து 346 பேர் பின்தொடர்கின்றனர் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக மன்கி பாத் ரேடியோ நிகழ்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் தன்னை எப்போதுமே சுறுசுறுப்பாகவே வைத்துக் கொண்டுள்ளார். நாட்டு மக்களுக்கு பாராட்டு, இரங்கல், அறிவுரை என பல்வேறு தகவல்களை அவர் ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார். இதனால், ட்விட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்திய அரசியல்வாதிகளில் யாருக்குமே இல்லாத அளவிற்கு பிரதமர் மோடிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் ட்விட்டரில் 4 கோடியே 48 ஆயிரத்து 316 பேர் பின்தொடர்வது தெரியவந்துள்ளது.
ஆனால், ராகுல் காந்தியை வெறும் 57 லட்சத்து 67 ஆயிரத்து 118 பேர் மட்டுமே பின் தொடர்பவர்களாக உள்ளனர். இதுவே சர்வதேச அளவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்படை 4 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 16 ஆக உள்ளது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வெறும் 8 லட்சத்து 84 ஆயிரம் பேர் மட்டுமே பின்தொடர்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.