விண்வெளியில் நடப்பதும் பறப்பதுமே சிரமம் என்ற நிலைமையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அந்தரத்தில் பேட்மின்டன் விளையாடி உலகத்தையே வாய்பிளக்க வைத்துள்ளனர்.
விண்வெளியில் சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பில் உருவாகியுள்ள சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த விண்வெளி மையத்தில் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விண்வெளி என்பதால் புவியீர்ப்பு விசை இல்லாமல் வீரர்கள் பறந்துகொண்டேதான் இருப்பர். இத்தகைய சூழலில் விண்வெளி மையத்தில் உள்ள வீரர்கள் பேட்மின்டன் போட்டி வைத்து விளையாடி அசத்தியுள்ளனர்.
உலகத்தைவிட்டு அண்டத்தில் விளையாடப்பட்ட முதல் விளையாட்டு பேட்மின்டன்தான் என்ற பெருமை ஏற்பட்டுள்ளது. மேலும் உலகத்தில் இல்லாமல் விண்வெளியில் வீரர்கள் விளையாடியது இதுதான் முதல்முறை. இப்போட்டியின் வீடியோவையும் விண்வெளி வீரர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோதான் தற்போது உலகளாவிய வைரல் ஹிட்.