கடாபியின் வங்கி கணக்கிலிருந்து 10 பில்லியன் டாலர் அபேஸ்… குழப்பத்தில் பெல்ஜியம் அரசு!

by Rahini A, Mar 9, 2018, 12:06 PM IST

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபிக்கு நெருக்கமானவர்கள் வசமிருந்த வங்கி கணக்குகள் அவரின் மறைவுக்குப் பிறகு முடக்கப்பட்டது. இதை மறைமுகமாக நிர்வகித்தது கடாபிதான் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த வங்கிக் கணக்கிலிருந்து 10 பில்லியன் டாலர் மாயமாகியுள்ளதாக பெல்ஜிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. லிபியாவின் முன்னாள் அதிபரான கடாபி மறைந்த பின்னரும் அவர் தொடர்பான சர்ச்சைகள் மறையவில்லை. இதுவரை அவரைப் பற்றி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இருக்கிறது தற்போது பெல்ஜிய அரசால் அவர் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு.

அதாவது, கடாபிக்கு நெருங்கியவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த 4 வங்கிக் கணக்குகளிலிருந்து சுமார் 10 பில்லியன் டாலர் அபேஸ் செய்யப்பட்டுள்ளதுதான் பெல்ஜிய அரசின் குற்றச்சாட்டு. ஐரோப்பியாவைச் சேர்ந்த யுரோக்ளியர் வங்கியில் கடாபி சார்பில் 4 வங்கிக் கணக்குகள் இருந்துள்ளன. அவர் மறைவுக்குப் பின்னர் இந்த கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.

ஆனால், 2017-ம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த கணக்குளிலிருந்து 10 பில்லியன் டாலர்கள் மாயமாகியுள்ளன. இது எப்படி என்றுதான் கடாபி சொத்து குறித்து விசார்த்து வரும் பெல்ஜிய அரசுக்குப் புரியவில்லை.

You'r reading கடாபியின் வங்கி கணக்கிலிருந்து 10 பில்லியன் டாலர் அபேஸ்… குழப்பத்தில் பெல்ஜியம் அரசு! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை