தேனி மாவட்டம், கொரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்டகாட்டுத் தீயில் சிக்கிய பெண்களை மீட்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், “தேனி மாவட்டம், கொரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்டகாட்டுத்தீயில் சென்னையில் இருந்து மலையேறும்பயிற்சிக்கு சென்ற ஐடி ஊழியர்களும், மாணவிகளும்சிக்கிக் கொண்டுள்ள அதிர்ச்சியான செய்திவந்துள்ளது. காட்டுத்தீயில் இருந்து ஒரு பகுதியினரைவனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளார்கள்.
மேலும் சிலர்காட்டுத்தீக்கு உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளதாகதெரிகிறது. சிக்கிக் கொண்டுள்ள பெண்களை மீட்கவும், காட்டுத்தீயை அணைப்பதற்கும் ராணுவஹெலிக்காப்டர்களை உடனடியாக அனுப்பி வைத்திடவேண்டும். தீயில் சிக்கிக்கொண்டுள்ளவர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல் அவர்களது உறவினர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். அதுகுறித்த தகவலை வெளியிட்டு பதற்றத்தை தணிக்க வேண்டும்.
தீக்காயம் அடைந்தவர்களுக்கு முழு வேகத்தில் சிகிச்சைஅளித்திட மருத்துவக்குழுக்களையும், அனைத்துவகையான ஆம்புலன்ஸ்களையும் அனுப்பி வைத்திடவேண்டும். இந்த காட்டுத்தீ இரண்டு மூன்று நாட்களாகஇருந்த நிலையில் அதனை அணைக்க முயற்சிமேற்கொள்ளப்பட்டதா என தெரியவில்லை. காட்டுத்தீஉள்ள பகுதியில் எப்படி பெண்களை அனுமதித்தார்கள்என்பது புரியாத புதிராக உள்ளது.
இவைகளைப்பற்றியெல்லாம் உரிய விசாரணை நடத்தவேண்டியுள்ளது. இருப்பினும் உடனடியாக தீயில்சிக்கியவர்களை மீட்பதற்கும், மீண்டவர்களுக்கு உயர்தரசிகிச்சை அளிக்க மத்திய மாநில அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று” வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண்களை மீட்க ராணுவ ஹெலிக்காப்டர் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.