நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளையும் வாழ்த்துகளையும் விராட் கோலிக்கு ட்விட்டர் மூலமாகத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் நட்சத்திரக் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் ஒரு சிறிய இடைவெளியில் மீண்டும் அவரவர் களத்துக்குத் திரும்பினர். விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சாதனை மேல் சாதனை புரியவும் அனுஷ்கா சர்மா தனது சொந்தத் தயாரிப்பில் நடித்து வெளியிட்ட 'பாரி' திரைப்பட ஹிட் கொடுக்கவும் இருவரும் மீண்டும் ஒரு ப்ரேக் எடுத்தனர்.
கோலி- அனுஷ்கா தம்பதியர் தங்கள் விடுமுறைக் காலக் கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் பகிர்வதில் தவறவில்லை. தினமும் சமூக வலைதளங்களில் இருவரும் மாறி மாறி தங்கள் கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிட்டவாறு இருந்தனர்.
இந்நிலையில், தற்போது விராட், "நிறைய விஷயங்கள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் நல்ல தகவல் தெரிவிப்பேன்" எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் விராட்- அனுஷ்கா தம்பதியருக்கு விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது என வாழ்துத் தெரிவித்து வருகின்றனர்.