இதயங்களை ஈர்த்த ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான்!

ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கானை கொரவித்த கூகுள் டூடுள்

by Suresh, Mar 21, 2018, 10:17 AM IST

பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான். 1916-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி பிறந்த இவர், காசியில் வசதிகுறைவான வீட்டில், ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர்.

இவரின், முன்னோர்கள் அரண்மனை இசைக் கலைஞர்களாக இருந்தனர். இசுலாமியரான பிஸ்மில்லா கான், காசி விசுவநாதர் ஆலயத்தில் இசைச் சேவை செய்துவந்த அவருடைய மாமா அலிபக்ஸ்-சிடம் செனாய் இசைக்கக் கற்றுக்கொண்டார். இதன் பின்னர், பல்வேறு நாடுகளில் ஷெனாய் வாசித்து புகழ்பெற்றார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், முதல் இந்தியக் குடியரசு விழா ஊர்வலத்தில் பிஸ்மில்லா கான், கங்கையில் ஓடம் ஓட்டுபவரின் ஓடப்பாட்டை செனாயில் இசைத்தபடி சென்றார். இந்த ஊர்வலத்தில், நேரு உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஸ்மில்லா கான் “மனிதர்கள் கடவுளால் படைக்கப் பட்டிருந்தால் மனித உறவில் ஏன் சமத்துவம் இல்லை?” என்று கேள்வி எழுப்பியவர். இதன் மூலம் அவர் சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாகக் கொண்டவர் என்பது தெரியவருகின்றது.

அதேபோல, நாள்தோறும் ஐந்து வேளை தொழுகை செய்துவந்த பிஸ்மில்லா கான், மத வேறுபாட்டை ஏற்காதவர். அதனால்தான், காசியின் பாலாஜி கோயில், சங்கத் மோட்சர், கங்கா மாயா, சரசுவதி ஆகியவற்றோடு மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

பிஸ்மில்லா கான் ‘பாரத ரத்னா’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். இவருக்கு, பல்வேறு பல்கலைக் கழகங்கள் டாக்கடர் பட்டம் வழங்கி கௌரவித்தன. இந்நிலையில், இவர் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 21-ஆம் நாள் காலமானார். அவரின் பிறந்தநாளான இன்று கூகுள் டூடுள் செய்து அவரை கௌரவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இதயங்களை ஈர்த்த ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான்! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை