சமூக நீதி தினமாக அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

by Isaivaani, Mar 24, 2018, 09:10 AM IST

சட்ட மேதை பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதி சமூக நீதி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக எம்பிக்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது, தேர்தல் தோல்வியால் துவண்டுப் போயுள்ள எதிர்கட்சிகள் மத்திய அரசை பற்றி பொய்யான தகவல்களை கூறி வருகின்றன என குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு பேசிய பாஜ செய்தி தொடர்பாளர் அனில் பலூரி, “சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவர் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய இவர், 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தார். இவரது பிறந்த தனிமான ஏப்ரல் 14ம் தேதியை ஆண்டுதோறும் நாடு முழுவதும் சமூக நீதி தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல், மே 2ம் தேதியை விவசாயிகளை கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது ” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சமூக நீதி தினமாக அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படும்: மத்திய அரசு அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை