காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யூடியூப் பிரபலங்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலதாமதம் ஏற்படுத்தி வருவதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ் யூ டியூப் சேனல்களில் கலக்கும் ஜம்ப் கட் ஹரி பாஸ்கர், எறுமை சாணி விஜய், மெட்ராஸ் சென்டர் கோபி உள்பட பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் பிரபலங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.