உடலுக்கு மிகவும் சத்தான ப்ராக்கோலி பொரியல் எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..
தேவையான பொருட்கள் :
ப்ராக்கோலி - 1 (சிறியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு & தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ப்ராக்கோலியை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு வாணிலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில், ப்ராக்கோலி மற்றும் உப்பு சேர்த்து 3&5 நிமிடம் நன்கு வதக்கி, ப்ராக்கோலி நன்கு அடர் நிறத்தில் மாறும்போது, அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ப்ராக்கோலி பொரியல் ரெடி.