மே 6ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு ஆடை கட்டுபாடுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு

Apr 20, 2018, 16:49 PM IST

மே 6ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு ஆடை கட்டுபாடுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு
நாடு முழுவதும் வரும் மே 6ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாடு விதிகள் குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக கட்டாயம் நீட் தகுதி தேர்வு கடந்த 2016ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் உள்ளே அனுமதிப்பதற்கு முன்பு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. இதனால், மாணவர்களின் உடைகள் களையப்பட்டு, கண்ணாடி, வாட்ச், பெல்ட், காலணிகள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதேபோல், மாணவிகளுக்கும் கம்மல், செயின் போன்ற ஆபரணங்கள், முழுகை சட்டைகள் அணியத்தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆடைகள் கட்டுப்பாடுக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் வெளிர்நிற ஆடைகளை உடுத்தி வர வேண்டும். அரைக்கை கொண்ட ஆடை, சல்வார் மற்றும் பேன்ட்டுகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ், பூக்கள் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது.  ஷூ அணியக்கூடாது. ஹை ஹீல்ஸ் அணியக்கூடாது. தகவல் தொடர்பு சாதனங்களை «த்வு மையத்துக்கு கொண்டு வரக்கூடாது.

ஜியோமெட்ரிக், பென்சில், பாக்ஸ், கைப்பை, பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச், மெட்டாலிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது என்றும் சிபிஎஸ்இ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை தேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவுறுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மே 6ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு ஆடை கட்டுபாடுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை