நாம் எதற்கெல்லாம் கை தட்டுவோம் ?? ஒருவரை பாராட்ட, நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த கை தட்டுவோம். ஆனால், இந்த கைதட்டுதலில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. கை தட்டுவது ஒரு யோகாப் பயிற்சிக்கு இணையானது. தினமும் கைதட்டும் பயிற்சி செய்துவந்தால், மருந்துகளால்கூட ஏற்படுத்த முடியாத நல்ல மாற்றங்கள் கிடைக்கும். இங்கு கை தட்டுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
நன்மைகள் :
ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பிரச்னைகள் கட்டுக்குள் வருகின்றன. நுரையீரல் வலுப்பெறும். கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி சரியாகும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். செரிமானத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது. கவனத்திறனைக் கூர்மையாக்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
தினமும் அரை மணி நேரம் கை தட்டுவதால், சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, இன்சோம்னியா எனும் உறக்கமின்மைப் பிரச்னை, கண் பிரச்னை ஆகியவை நீங்கும்.
எப்போதும் ஏ.சி-யிலேயே இருப்பவர்கள், வியர்வை சுரப்புக் குறைவாக உள்ளவர்கள் கிளாப்பிங் தெரப்பி செய்வதால், ரத்த ஓட்டம் மேம்பட்டு, ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
மூளையின் நியூரோடிரான்ஸ்மீட்டர்கள் தூண்டப்பட்டு, செரட்டோனின் சுரப்பு மேம்படும். இதனால், மூளை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்படுகிறது.
உற்சாகம் குறைவாக, சோர்வாக இருக்கும் நேரத்தில் கை தட்டினால், அது நம் மனநிலையை மாற்றி உற்சாகப்படுத்தும்.
ரத்த ஓட்டம் மேம்படுவதால், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் இயல்பாகும்.
குழந்தைகளுக்குக் கை தட்டுவதைக் கற்றுத் தருவதால், அவர்களின் ‘ஃபைன் மோட்டார்’ திறமைகள் எனப்படும் எழுதுவது, ஓவியம் வரைவது போன்ற திறன்கள் மேம்படும்.