தலைமுடி தெரிய பெண்கள் பயிற்சி செய்ததால் சவுதி அரசு அதிரடி நடவடிக்கை

Apr 23, 2018, 13:12 PM IST

தலைமுடி தெரிய பெண்கள் பயிற்சி செய்ததால் சவுதி அரசு அதிரடி நடவடிக்கை
பலத்த கட்டுப்பாடுக்கு இடையில், தலைமுடியை மறைக்காமல் பெண்கள் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகளை வெளயிட்ட உடற்பயிற்சி மையத்திற்கு சீல் வைத்து சவுதி அரேபியா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளை நிறைந்தது சவுதி அரேபியா நாடு. ஆனால், சமீபகாலமாக கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு வாகனம் ஓட்டுதல், பள்ளிகளில் விளையாட்டுப் பயிற்சி, 38 ஆண்டுகளுக்குப் பின் தியேட்டர் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டது.

சவுதியில் பெண்களுக்கென காலம் காலமாக கடைபிடித்து வரும் கட்டுப்பாடுகளில் ஒன்று தலையை துணியால் மறைப்பது. இதை அவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்நிலையில், தலைமுடியை மறைக்காமல் பயிற்சியில் ஈடுபடுவதும், ஒருவரை ஒருவர் கட்டிக் பிடிப்பது போன்ற பயிற்சிகள் செய்து வருவது போன்ற காட்சிகளும் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி மையம் வெளியிட்டது.

இதைதொடர்ந்து, உடற்பயிற்சி மையத்திற்கு சீல் வைத்து மூட சவுதி அரேபியா அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Get your business listed on our directory >>More Akkam pakkam News

அதிகம் படித்தவை