தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து மாசுகட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையால் இன்று காலை முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொது மக்கள் நடத்திய போராட்டம் போலீசாரின் அறிவின்றி எடுத்த துப்பாக்கிச் சூடு நடவடிக்கையால் போர்களமானது. இதில், 12 பேர் பலியாகினர்.
தொடர்ந்து, அம்மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் நேற்று துப்பாக்கிச் சூடு கண்டித்து போராட்டம் நடந்ததால் போலீசார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், இளைஞர் ஒருவர் பலியானார். இதன் மூலம், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின்படி இன்று காலை 5.30 மணி முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பை மின் வாரியம் துண்டித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com