ஐதராபாத் மாநகர நிர்வாகம் நகரில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு ‘ஈகோ- ஃப்ரெண்ட்லி’ மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
எல் & டி மெட்ரோ ரெயில் (ஐதராபாத்) லிமிட்டெட் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் மின்சார சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த உள்ளது. பவர் கிரிட் கார்பரேஷனுடன் சேர்ந்து இந்தப் பணியை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது ஐதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம்.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஐதராபாத்தில் தான் இதுபோன்றதொரு மின்சார சார்ஜிங் ஸ்டேஷன்கள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்சார வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.
மக்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தப் புது முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதைப் போன்ற மாற்றங்கள் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானது என்றும் கூறப்படுகிறது.
காரணம், பருவ நிலை மாறுபாடுகளுக்கும், புவி வெப்பமயமாதலுக்கும் இந்த மாதிரி மாற்றங்கள் எதிர்வினையாற்றும் என்று கூறப்படுகிறது. ஐதரபாத் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இருக்கும் மியாப்பூர் மற்றும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பாலாநகர் ஸ்டேஷன்களில் இந்த மின்சார சார்ஜிங் மையங்கள் பொருத்தப்பட உள்ளன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com