ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

May 30, 2018, 12:16 PM IST

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

கடந்த 2006ல் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கான அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் கார்த்திக் சிதம்பரத்தின் தலையீடு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 


இந்த வழக்கு விசாரணைக்காக ஜூன் 5ஆம் தேதி ஆஜராகக் கோரி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அன்றைய தினம் தாம் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், முன்ஜாமின் வழங்கக் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அத்துடன் ஜூன் 5ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ப.சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை