நீட் தேர்வு முடிவு: தமிழக அளவில் மாணவி கீர்த்தனா முதலிடம்

Jun 4, 2018, 18:37 PM IST

நீட் தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர், இந்திய அளவில் 12வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் இந்திய அளவில் சுமார் 13 லட்சம் பேர எழுதினர். தமிழக அளவில் 1.14 லட்சம் பேர் எழுதினர். இதில், 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 39.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், தேசிய அளவில் 720 மதிப்பெண்களுக்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர், இயற்பியலில் 180க்கு 171, வேதியியலில் 160, உயிரியல், விலங்கியல் 360க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 12வது இடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நீட் தேர்வு முடிவு: தமிழக அளவில் மாணவி கீர்த்தனா முதலிடம் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை