தரையில் சிந்திய காப்பியை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
நெதர்லாந்து நாடாளுமன்றத்திற்க, பிரதமர் மார்க் ரூடே வந்தார். அப்போது அவரது கையில் இருந்த காபி கப் தெரியாமல், தவறி கீழே விழுந்தது.
அதனை சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளரிடமிருந்து துடைப்பானை வாங்கிய பிரதமர் மார்க் ரூடே, தானே சுத்தம் செய்வதாக கூறி அதனை சுத்தம் செய்தார்.
பிரதமரின் இந்த செயலுக்கு அவரின் உதவியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
நெதர்லாந்து பிரதமரின் இது போன்ற எளிமையான செயல்கள் அந்நாட்டு மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.