ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலா நிரவ் மோடி மோசடி செய்தார்?

by Rahini A, Jun 12, 2018, 18:32 PM IST
பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் நிரவ் மோடியை கைது செய்ய அனைத்து வேலைகளையும் சிபிஐ செய்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற ஸ்டாண்டிங் குழு முன்னிலையில் வங்கித் துறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்து விளக்க வந்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்.
அவரை, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர், நிரவ் மோடி விவகாரம் குறித்து கேள்வி கேட்டு துளைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிரவ் மோடி மீது தற்போது சிபிஐ வழக்கு உள்ளது. அவருக்கு தொடர்ந்து, நேரில் ஆஜராகும்படி சம்மனும் அனுப்பி வருகிறது. ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல் சுற்றி வருகிறார் நிரவ் மோடி. இந்நிலையில், நாடாளுமன்ற ஸ்டாண்டிங் கமிட்டி முன்னிலையில் வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரை, 'ரிசர்வ் வங்கி கடன் கொடுக்கும் நிதி குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இப்படி கண்காணிக்கப்படும் போதே இவ்வளவு பெரிய தொகை எப்படி பெறப்பட்டு உள்ளது.
அப்படியென்றால், ரிசர்வ் வங்கிக்கு சரியாக கண்காணிக்கும் திறன் இல்லையா? ரிசர்வ் வங்கிக்கு யாரைப் பற்றியும் விசாரணை செய்யும் அதிகாரம் இருக்கிறது. பிறகு எப்படி நிரவ் மோடி பற்றிய தகவல்களை சரி பார்க்கமால் விட்டது? இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கி கிளைகளிலும் ஆய்வு செய்ய ஆர்.பி.ஐ-க்கு அதிகாரம் உள்ளதுதானே? பிறகு ஏன் தனது அதிகாரத்தை ரிசர்வ் வங்கி பயன்படுத்தவில்லை?' என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக நிரவ் மோடி, டேவோஸில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

You'r reading ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலா நிரவ் மோடி மோசடி செய்தார்? Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை