பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், அதில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரின் வீட்டுக்கு முன்னேலேயே சில நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ஸ்ரீ ராம் சேனா என்ற சர்ச்சைக்குரிய அமைப்பை நடத்தி வரும் பிரமோத் மாலிக், கௌரி லங்கேஷ் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நபருடன் புகைப்படம் எடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்தப் புகைப்படத்தில் பிரமோத் மாலிக்குடன் இருக்கும் நபரின் பெயர் பரசுராம் வாக்மாரே.
இவர் தான் கௌரி லங்கேஷைக் கொன்றவர்பகளில் முக்கியமானவர் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. இந்நிலையில் பிஜப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிந்தாங்கியில் பரசுராம் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.