சென்னையில் கடந்த 4 நாட்கள் நடந்த போலீஸ் சோதனையில் 2, 750 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகரின் சில இடங்களில் கடந்த சில தினங்களாக செயின், செல்போன் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருந்தன. இது தொடர்பாக காவல்நிலையங்களில் பல புகார் குவிந்தன.
இதனை தொடர்ந்து சென்னை மாநகர போலீசார் பல பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 4 நாட்களாக இந்த சோதனை தொடர்ந்தது. இதில் 2, 750 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து இரவு பணி காவலர்களுடன் சேர்த்து, கூடுதலாக இரண்டு சிப்டுகள் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கமாக இரவுப்பணியில் ஈடுபடும் காவலர்கள் விட, கூடுதலாக இரவில் 6 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் கூடுதலாக இரண்டு உதவி ஆணையர் தலைமையில் 30 காவலர்கள், இரண்டு சிப்டுகளில் ரோந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.