கேரளாவில் கோழிக்கோடு வனப் பகுதியில் பேருந்து ஒன்றை மதம் பிடித்த யானை துரத்தம் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மிரட்சி கிளப்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. கோழிக்கோட்டில் இருக்கும் பண்டிப்பூர் வனப் பகுதியில் பல பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது ஒரு பேருந்து.
அப்போது பேருந்தின் ஓட்டுநர் எதிர்பாராத விதமாக ஒரு யானைக் கூட்டம் சாலையைக் கடக்கும் போது, அருகில் சென்று விடுகிறார். இதையடுத்து, அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு யானை பேருந்தை துரத்த ஆரம்பிக்கிறது. இதனால், பயம் கொண்ட ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸில் ஓட்ட ஆரம்பிக்கிறார்.
யானையும் விடாமல் துரத்தி வருகிறது. ஏறக்குறைய 500 மீட்டர் தூரத்துக்கு பேருந்து ரிவர்ஸில் செல்லும் போது, யானை அருகில் வந்து விடுகிறது. இதையடுத்து, தனது தும்பிக்கையால் பேருந்தின் முன் புறத்தை யானை சேதப்படுத்துகிறது.
அதிர்ஷ்டவசமாக, அந்த ஒரேயொரு தாக்குதலுடன் யானை மீண்டும் தன் கூட்டத்திற்கேச் செல்கிறது. இந்த சம்பவங்களின் பெரும்பான்மை காட்சிகளை பேருந்தில் இருக்கும் ஒரு பயணி வீடியோவாக பதிவு செய்கிறார். இந்த சம்பவத்தில் எந்தப் பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.