சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி ? கேரள அமைச்சர் பதில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கப்படும் என்று தேவசம் போர்டு சம்மதித்துள்ளதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், வயது வித்தியாசமின்றி பெண்களை அனுதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கன்வில்கர் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, கேரள அரசு சார்பில் வாதாடிய வக்கில், “சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்று கூறி அரசு சார்பில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், ஆண்களைப் போல் பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும், இதனை மறுப்பது சட்டத்திற்கு விரோதமானது என்றும் நீதிபதிகள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். இருப்பினும், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம். கேரள தேவசம் போர்டு மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு ஓத்துழைப்பு கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
Tag Clouds