சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

Jul 25, 2018, 20:35 PM IST

சென்னை எழும்பூ & செங்கோட்டை இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் வரும் ஆகஸ்டு மாதம் 6ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 25ம் தேதி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த இடைப்பட்ட காலங்களில் சென்னை எழும்பூரில் இருந்து திங்கட்கிழமைதோறும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்குச் செங்கோட்டையைச் சென்றடையும். இதேபோல், செங்கோட்டையில் இருந்து செவ்வாய்க்கிழமைதோறும் மாலை 4.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 5.35 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படும். இதேபோல, வேளாங்கண்ணியில் இருந்து மும்பை குர்லாவுக்கு ஆகஸ்டு 25ம் தேதி காலை 8.30 மணிக்கும், வேளாங்கண்ணியில் இருந்து மும்பை பாந்த்ராவுக்கு ஆகஸ்டு 29ம் தேதி இரவு 9.45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

You'r reading சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை