தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சையா? - அதிர வைக்கும் கேரளா முதல்வர்

Advertisement

விபத்தில் சிக்குபவர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 2 நாள் இலவச சிகிச்சை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கேரள முதல் வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியைச் சோந்த முருகன் என்ற கூலித் தொழி லாளி கடந்த ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரத்தில் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந் தார். அவருக்கு யாரும் உதவ வராததாலும், அவரிடம் பணம் இல்லாததாலும் 5 மருத்துவமனைகளில் அவரை சேர்க்க முயற்சி செய்தும் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை.

இதனால் இரத்தம் அதிக அளவு வெளியேறி மரணமடைந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார். ஆனால் 5 மணி நேரம் வரை பல மருத்துவ மனைகளுக்கு கொண்டு சென்றனர். இதே போல் கடந்த மாதமும் சிகிச்சை அளிக்க மறுத்த காரணத்தால் ஒருவர் உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வராததற்குக் காரணம் மருத்துவமனையில் சிகிச்சைக்கான முன்பணம் தரவும், சிகிச்சைக்கு கட்டணத்தை தர இயலாமையும் காரணமாக மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தொடர்ந்து மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் விபத்தில் சிக்குபவர்களை அருகில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதித் தால் அவாகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் ஏழையா? பணக்காரரா? என்று பார்க்காமல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த சிகிச்சைக்குரிய பணத்தை அரசே செலுத்தும். சிகிச்சை பெறுபவர்கள் வசதிக் குறைவாக இருக்கும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து வசூல் செய்து வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் விபத்தில் சிக்குபவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் போது அதற்கும் பணம் வசூலிக்கக்கூடாது என்றும் பினராயி விஜயன் கூறினார். .

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பவர்களின் உடலை பணத்தை கட்டினால்தான் உறவினர்களிடம் ஒப்படைப்போம் என்று கூறினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
/body>