பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் கொழுப்பு சேர்ந்து விட்டதா??எப்படி குறைப்பது?? வாங்க பாக்கலாம்..

how to reduce belly after delivery

by Logeswari, Sep 11, 2020, 19:06 PM IST

பெண்கள் கல்யாணம் ஆகும் வரை ஒல்லியாக, ஸ்லிம்மாக இருப்பார்கள். ஆனால் குழந்தை பெற்ற பிறகு மற்றும் கல்யாணம் ஆன பிறகு உடலில் ஏற்படுகின்ற ஹார்மோனின் மாற்றத்தால் உடல் பருமன் அடைவார்கள்.அதுவும் கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களின் வயிற்றில் அளவில்லாத கொழுப்புகள் சேர்ந்து வயிறு குண்டாக காணப்படும். இதலில் இருந்து விடுபட சில உடற்பயிற்சியை மேற்கொண்டு வரும் பெண்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காமல் தத்தளிக்கின்றனர்.அது போன்ற தாய்மார்களுக்கு எப்படி கொழுப்பை குறைக்க வேண்டும் என்று சில குறிப்புகளை பகிரவுள்ளேன்.வாங்க பார்க்கலாம்….

தாய் பால் கொடுத்தல்:-

பிறந்த குழந்தைக்கு சரியான நேரத்தில் தாய் பால் கொடுத்தால் அதிக அளவிலான கலோரிகள் குறையும்.பால் ஊட்டுவதால் தினமும் 500 கலோரிகள் குறைய கூடும் என்று மருத்துவர்கள் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.தாய் பால் அதிகமாக உற்பத்தி ஆக ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.தாய் பால் குடுப்பதால் பால் மார்பில் கட்டாதவாறும் மார்பக புற்று நோய் வராதவாறும் காக்கின்றது.

அதிகமாக சாப்பிடுவது அவசியம்:-

இந்த நேரத்தில் வயிற்றை காய போட கூடாது.தேவையான ஆரோக்கிய உணவை சாப்பிடுவது அவசியமானது.சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் காற்று நிரம்பி குண்டாக மாறும்.அவ்வாறு மாறிவிட்டால் உடலை குறைப்பது சற்று கடினமான ஒன்றாகி விடும். குழந்தைக்கு தாய் பால் குடுக்க ஒரு தாய்க்கு தினமும் 1800-2200 கலோரிகள் தேவைப்படுகிறது.அதிக விட்டமின் நிறைந்த ஆரோக்கிய உணவுகளை தேடி தேடி உண்ண வேண்டும்.

எளிதான உடற்பயிற்சி அவசியம்:-

குழந்தை பிறந்தவுடன் உடனே உடற்பயிற்சி செய்ய தொடங்குங்கள்.மிகவும் பலமான உடற்பயிற்சியை தவிர்த்து எளிமை உடற்பயிற்சியான நடப்பது,நடனம் ஆடுவது,சுவாச பயிற்சி,இது போன்ற பயிற்சியை செய்து வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைத்து வயிறு ஒல்லியாக மாறும்…

நன்றாக சாப்பிட்டு எளிமையான உடற்பயிற்சி செய்து வந்தால் கட்டான உடலை பெறலாம்.



You'r reading பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் கொழுப்பு சேர்ந்து விட்டதா??எப்படி குறைப்பது?? வாங்க பாக்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Aval News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை